இன்ஸ்டாகிராம் வேகம் குறைவாக Load ஆகின்றதா? இதோ வந்துவிட்டது தீர்வு

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

தற்போது உலக அளவில் 4G இணைய வலையமைப்பு பயன்படுத்தப்படுகின்ற போதிலும் சில பிரதேசங்களில் இணைய இணைப்புக்கள் வேகம் குறைவாகவே இருக்கின்றன.

இவ்வாறான இடங்களில் வீடியோக்கள், புகைப்படங்கள் என்பன Load ஆகுவதற்கு நீண்ட நேரம் எடுக்கும்.

இப் பிரச்சினை இன்ஸ்டாகிராமிலும் காணப்படுகின்றது.

எனவே இப் பிரச்சினைக்கு தீர்வாக புதிய வசதி ஒன்று இன்ஸ்டாகிராமில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவ் வசதியானது உயர் ரெசொலூசனில் வீடியோக்கள், புகைப்படங்கள் டவுண்லோட் ஆகின்றமையை தடுகின்றனது.

இதனால் இன்ஸ்டாகிராம் வேகமாக செயற்படுகின்றது.

இவ் வசதியினை செயற்படுத்துவதற்கு இன்ஸ்டாகிராமில் Settings பகுதியில் உள்ள Account பகுதிக்கு சென்று Cellular Date Use என்பதை On செய்ய வேண்டும்.

இதன்போது Never, Wi-Fi Only மற்றும் Cellular + Wi-Fi ஆகிவற்றில் ஒன்றினை தெரிவு செய்ய வேண்டும்.

இத் தெரிவானது உயர் ரெசொலூசனில் மீண்டும் வீடியோ, புகைப்படங்களை காண்பிப்பதற்கு ஆகும்.

இதேவேளை இவ் வசதி தற்போது அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷன்களுக்கு மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்