வாட்ஸ் ஆப்பில் கிரிக்கெட் ஸ்டிக்கர்களை பெற்றுக்கொள்வது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

தற்போது இந்தியாவில் இடம்பெற்றுவரும் IPL கிரிக்கெட் போட்டிகளை கருத்தில்கொண்டு பேஸ்புக்கினால் கொள்வனவு செய்யப்பட்ட வாட்ஸ் ஆப் செயலியில் புதிய ஸ்டிக்கர் வசதி ஒன்று அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன்படி பயனர்கள் கிரிக்கெட் தொடர்பான ஸ்டிக்கர்களை நண்பர்களுக்கு பரிமாற்றம் செய்து மகிழ முடியும்.

தற்போது இவ் வசதி அன்ரோயிட் சாதனங்களில் பயன்படுத்தப்படும் வாட்ஸ் ஆப் செயலிக்கு மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது.

இவ் வசதியினைப் பெறுவதற்கு முதலில் வாட்ஸ் ஆப் செயலியினை திறக்க வேண்டும்.

பின்னர் Chat Bar இல் உள்ள ஈமோஜி வசதியினை தெரிவு செய்ய வேண்டும்.

ஈமோஜி ஸ்கிரீனிலுள்ள ஸ்டிக்கர் வசதியினை தெரிவு செய்து அதிலுள்ள புதிய ஸ்டிக்கர்களை சேர்ப்பதற்கான '+' குறியீட்டினை அழுத்தவும்.

இப்போது Cricket Matchup எனும் சொல்லைப் பயன்படுத்தி தேடுவதன் மூலம் குறித்த கிரிக்கட் ஸ்டிக்கர்களை தரவிறக்கம் செய்து பயன்படுத்தலாம்.

IPL போட்டிகளைத் தொடர்ந்து உலகக் கிண்ண கிரிக்கட் போட்டிகளும் ஆரம்பமாகவுள்ள நிலையில் இப் புதிய ஸ்டிக்கர்களுக்கு உலக அளவில் பலத்த வரவேற்பு காணப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்