இன்ஸ்டாகிராம் கடவுச்சொல்லினை மாற்றியமைப்பது எப்படி?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

பேஸ்புக் மற்றும் டுவிட்டர் சமூகவலைத்தளங்களுக்கு நிகராக முன்னணியில் திகழும் சமூகவலைத்தளமாக இன்ஸ்டாகிராம் காணப்படுகின்றது.

எனினும் இத் தளத்திலும் ஹேக்கர்கள் தமது கைவரிசையைக் காட்டி பயனர் பெயர்கள் மற்றும் கடவுச்சொற்களை தருகின்றனர்.

எனவே சில நாட்கள் இடைவெளியில் கடவுச்சொற்களை மாற்றியமைப்பது சிறந்ததாகும்.

இதனை செயற்படுத்துவதற்கு பின்வரும் படிமுறைகளை பின்பற்ற வேண்டும்.

முதலில் ஸ்மார்ட் கைப்பேசியில் இன்ஸ்டாகிராம் அப்பிளிக்கேஷனை இயக்கவும்.

பின்னர் புரபைல் ஐகானை கிளிக் செய்ய வேண்டும்.

அதனைத் தொடர்ந்து Settings பகுதிக்கு சென்று Privacy and Security என்பதில் உள்ள Password-யினை தெரிவு செய்யவும்.

இப்போது ஏற்கனவே பயன்படுத்தும் கடவுச்சொல்லினை வழங்கி பின்னர் புதிய கடவுச்சொல்லினை உட்புகுத்தி Save பொத்தானை அழுத்த வேண்டும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்