டுவிட்டர் அறிமுகம் செய்யும் Lights Out Dark Mode வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

அண்மைக்காலமாக Dark Mode எனப்படும் வசதி தொடர்பில் அதிக செய்திகள் வெளியாகிய வண்ணம் உள்ளன.

இவ்வசதியானது வெளிச்சம் குறைவான பகுதிகளில் கைப்பேசிகளை பாவிக்கும்போது பயனர்களின் கண்களுக்கு அசௌகரியம் ஏற்படுவதை தடுக்கின்றது.

எனவே பிரபல்யமான அப்பிளிக்கேஷன்களில் இவ்வசதி உள்ளடக்கப்பட்டு வருகின்றது.

தற்போது டுவிட்டரும் Dark Mode வசதியினை அறிமுகம் செய்துள்ளது.

அதாவது இரவு நேரங்களில் மின்விளக்கு ஒளியில் பயன்படுத்தும்போது வெள்ளை நிறப் பின்னணியில் பொதுவாக பயன்படுத்துவார்கள்.

எனினும் மின்விளக்குகள் அணைந்தால் கண்களுக்கு அதிக வெளிச்சத்தை வழங்கும்.

இதனால் அசௌகரியம் ஏற்படும். இச் சந்தர்ப்பத்தில் Dark Mode வசதியினை பயன்படுத்த முடியும்.

மேலும் டுவிட்டரில் வழங்கப்பட்டுள்ள Dark Mode வசதியானது கைப்பேசியின் மின்கலத்திலுள்ள மின்னையும் குறைந்த அளவே பயன்படுத்துவதனால் நீண்ட நேரம் மின்கலங்கள் செயற்படக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்