மொபைல் சாதனங்கள் நீண்ட நேரம் பயனர்களால் பயன்படுத்தப்பட்டு வருகின்றமையால் கண்களிற்கு அசௌகரியம் உண்டாகின்றது.
இதற்கு தீர்வாக அனேகமான மொபைல் அப்பிளிக்கேஷன்களில் Dark Mode வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
இதே வசதி தற்போது வாட்ஸ் ஆப்பிலும் அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எனினும் இவ் வசதியினை அன்ரோயிட் சாதனங்களுக்காக புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட பீட்டா பதிப்பில் மாத்திரமே பெற்றுக்கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வசதியின் ஊடாக வாடஸ் ஆப் செயலியின் பின்னணி கறுப்பு நிறத்திற்கு மாற்றப்படும் அதேவேளை எழுத்துக்கள் வெள்ளை நிறத்தில் காட்சியளிக்கும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.