பேஸ்புக் அறிமுகம் செய்துள்ள புதிய வசதி

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

சமூகவலைத்தள ஜாம்பவானான பேஸ்புக் நேற்றைய தினம் புதிய வசதி ஒன்றினை அறிமுகம் செய்துள்ளது.

பயனர்கள் மனுக்களை அளிக்கக்கூடிய வசதியே இவ்வாறு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இதன் ஊடாக பொது அலுவலகங்கள், ஏனைய நிறுவனங்கள் போன்றனவற்றிற்கு தமது நண்பர்களை திரட்டி மனுக்களை அளிக்க முடியும்.

இந்த வசதியானது முதன் முறையாக அமெரிக்காவில் மாத்திரமே அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

வெற்றிகரமான முறையில் இவ் வசதி காணப்படுமாயின் தொடர்ந்து ஏனைய நாடுகளில் உள்ள பயனர்களும் பயன்படுத்தக்கூடிய வகையில் தரப்படவுள்ளது.

இவ் வசதியினை ஒவ்வொரு நிறுவனத்திற்கும் உரிய பேஸ்புக் பக்கங்களிலிருந்து பெற்றுக்கொள்ள முடியும்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்