குழந்தைகளுக்கான பேஸ்புக் மெசஞ்சர் அப்பிளிக்கேஷன் பாதுகாப்பானதா?

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

சட்டிங், வீடியோ, குரல்வழி அழைப்பு போன்ற பல்வேறு வசதிகளை உள்ளடக்கியதாக மெசஞ்சர் அப்பிளிக்கேஷனை பேஸ்புக் நிறுவனம் அறிமுகம் செய்திருந்தது.

இதேபோன்று பாதுகாப்பான முறையில் குழந்தைகள் பயன்படுத்தக்கூடிய வகையில் பேஸ்புக் மெசஞ்சர் கிட்ஸ் எனும் அப்பிளிக்கேஷனையும் அறிமுகம் செய்திருந்தது.

குறித்த அப்பிளிக்கேஷன் அறிமுகம் செய்யப்பட்டு ஒரு வருடம் நிறைவடைகின்ற நிலையில் இதன் பயன்பாடு தொடர்பில் அபிப்பிராயங்களை பேஸ்புக் நிறுவனம் பெற்றோர்களிடமிருந்து பெற்றுக்கொண்டுள்ளது.

இதன்படி பெற்றோர்களையும், நண்பர்களையும் இணைப்பதற்கு இந்த அப்பிளிக்கேஷன் பெரும் உதவியாக இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

அத்துடன் அநாவசியமான சில உள்ளடக்கங்கள் குழந்தைகளின் கவனத்தை திருப்புவதாகவும் தெரிவித்துள்ளனர்.

இதனால் நன்மை, தீமை என்பன பாதிக்கு பாதி உள்ள அப்பிளிக்கேஷனாக இதனை குறிப்பிட்டுள்ளனர்.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்