லட்சக்கணக்கானோர் பயன்படுத்தும் அப்பிளிக்கேஷன்களை அதிரடியாக நீக்கும் கூகுள்

Report Print Givitharan Givitharan in ஆப்ஸ்

இதுவரை சுமார் 5 இலட்சத்திற்கும் மேற்பட்ட அன்ரோயிட் பாவனையாளர்களால் இன்ஸ்டால் செய்யப்பட்டு பயன்படுத்தப்பட்டு வரும் சில அப்பிளிக்கேஷன்களை கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது.

குறித்த அப்பிளிக்கேஷன்களில் காணப்படும் பாதுகாப்பு குறைபாடுகள் காரணமாகவே கூகுள் பிளே ஸ்டோரிலிருந்து இவ்வாறு நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

ESET நிறுவனமே குறித்த அப்பிளிக்கேஷன்கள் தொடர்பில் ஆய்வுகளை மேற்கொண்டிருந்தது.

இதனைத் தொடர்ந்து 13 அப்பிளிக்கேஷன்கள் பிளே ஸ்டோரிலிருந்து நீக்கப்படுகின்ற தகவலை ESET நிறுவனத்தின் பாதுகாப்பு ஆராய்ச்சியாளராக திகழும் Lukas Stefanko என்பவர் டுவிட்டர் மூலம் தெரியப்படுத்தியுள்ளார்.

இந்த அப்பிளிக்கேஷன்களுள் Truck Simulator, Fire Truck Simulator, Luxury Car Driving Simulator போன்றனவும் அடங்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்