பேஸ்புக்கின் டேட்டிங் சேவை: சோதனை முயற்சியாக அறிமுகம்

Report Print Kabilan in ஆப்ஸ்

பிரபல பேஸ்புக் நிறுவனம் கடந்த மே மாதம் அறிவித்த டேட்டிங் சேவையை, சோதனை முயற்சியாக கொலம்பியாவில் அறிமுகம் செய்துள்ளது.

பேஸ்புக் நிறுவனம் தனது வருடாந்திர தொழில்நுட்பவியலாளர்கள் கூட்டத்தில், கடந்த மே மாதம் டேட்டிங் சேவையை அறிமுகம் செய்தது.

உலகின் பல்வேறு நாடுகளில் தங்களுக்கு ஏற்ற இணையை இணைய உலகில் தேடிக் கொள்ள பல்வேறு செயலில் உள்ள நிலையில், பேஸ்புக்கின் இந்த அறிவிப்பு மிகுந்த ஆவலை ஏற்படுத்தியது.

இந்நிலையில், பேஸ்புக் நிறுவனம் இந்த டேட்டிங் சேவையை சோதனை முயற்சிக்காக முதல் முறையாக கொலம்பியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலி பல்வேறு சிறப்பம்சங்களை கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தற்போது உள்ள பேஸ்புக் செயலியிலேயே பயன்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

நமது பேஸ்புக் கணக்கு விவரங்களை பகிராமலேயே அல்லது மற்றவர்களுக்கு தெரிவிக்காமலேயே இந்த வசதியை பயன்படுத்தலாம் என பேஸ்புக் நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் ஆப்ஸ் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்