படிக்கட்டுகளில் தவறி விழுந்த ஹிலாரி கிளிண்டன்: வைரலாகும் வீடியோ

Report Print Athavan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com

ஹிலாரி கிளிண்டனுக்கும், படிக்கட்டுகளுக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம் தான் என்பதை அவர் மீண்டும் ஒருமுறை உறுதி செய்துள்ளார் .

ஐந்து மாதங்களுக்கு முன்பு தான் லண்டன் ஹொட்டல் ஒன்றில் படிக்கட்டுகளில் தவறி விழுந்து கால் விரல்களை உடைத்து கொண்டார்.

தற்போது இந்தியாவில் மீண்டும் ஒரே நேரத்தில் இருமுறை படிக்கட்டுகளில் அவர் தவறி விழும் காட்சி இணையத்தில் வேகமாக பரவி வருகிறது.

2016ம் ஆண்டு அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ஹிலாரி தோல்வி அடைந்ததை விளக்கும் வகையில் அவர் எழுதியுள்ள புத்தக வெளியீட்டு விழாவிற்காக திங்கட்கிழமை இந்தியா வந்தார்.

டெல்லியில் உள்ள Jahaj Maha palace-யை அவர் சுற்றி பார்க்கும் போது படிக்கட்டுகளில் ஒரே நேரத்தில் இருமுறை ஹிலாரி கிழே விழும் காட்சியை பத்திரிக்கையாளர் ஒருவர் பதிவு செய்ய அது தற்போது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்