அமெரிக்காவிற்கு மிகப் பெரிய அச்சுறுத்தல் வடகொரியா: போர் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது

Report Print Santhan in அமெரிக்கா
256Shares
256Shares
lankasrimarket.com

அமெரிக்காவிற்கு, மிகப்பெரிய அச்சுறுத்தலாக வடகொரியா விளங்குவதாக வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் தெரிவித்துள்ளார்.

கலிபோர்னியாவின் சிமி பள்ளத்தாக்கு பகுதியில் நடந்த தேசிய பாதுகாப்பு மன்றக் கூட்டத்தில் பேசிய வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மெக்மாஸ்டர், அமெரிக்காவுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக வடகொரியா விளங்குவதாகவும், இதை சமாளிக்க ஆயுதமில்லா வழிகள் பல இருப்பதாகவும் கூறியுள்ளார்.

அதுமட்டுமின்றி இப்படி தொடர்ந்து உலகநாடுகளுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வரும் வடகொரியா மீது சீனா மேலும் பல பொருளாதார தடைகளை விதிக்கலாம் எனவும் கூறியுள்ளார்.

இப்படி பொருளாதார தடைகள் விதித்தாலும் வடகொரியா ஜனாதிபதியான கிம் ஜாங் உன் மிகுந்த நெருக்கடி கொடுப்பதால், போருக்கான சாத்தியக்கூறுகள் அதிகரித்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

வடகொரியா சமீபத்தில் மேற்கொண்ட ஏவுகணை சோதனையானது அமெரிக்கா மற்றும் பிரித்தானியாவை தாக்கும் வல்லமை கொண்டது என்று நிபுணர்கள் தெரிவித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்