கருப்பை மாற்றம் செய்யப்பட்ட பெண் குழந்தையைப் பெற்றெடுத்து சாதனை

Report Print Givitharan Givitharan in அமெரிக்கா
0Shares
0Shares
lankasri.com

மகப்பேற்றில் பிரச்சினை உள்ள பெண்களுக்கு சில சமயங்களில் அவர்களின் கருப்பையை மாற்ற வேண்டிய அவசியம் உண்டாகும்.

இதனை மருத்துவ உலகு ஏற்கனவே சாத்தியப்படுத்தியுள்ளது.

மேலும் இவ்வாறான கருப்பை மாற்றம் மூலம் குழந்தையைப் பெற்றெடுத்த சம்பவங்கள் ஏற்கனவே இடம்பெற்றுள்ளன.

ஆனாலும் அமெரிக்காவில் முதன் முறையாக பெண் ஒருவர் கருப்பை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

டெக்ஸாசின் டலஸ் பகுதியில் உள்ள பல்கலைக்கழக மருத்துவ நிலையத்தில் கடந்த வருடம் இவருக்கு கருப்பை மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையியே கடந்த மாதம் குழந்தையைப் பிரசவித்துள்ளார்.

சுவீடனில் மாத்திரம் 2014ம் ஆண்டிலிருந்து இன்று வரை 8 பெண்கள் இவ்வாறு கருப்பை மாற்றம் செய்யப்பட்ட நிலையில் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்