இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்த பொலிசார்: நடந்தது என்ன?

Report Print Raju Raju in அமெரிக்கா
0Shares
0Shares
lankasrimarket.com

பொலிஸ் விசாரணைக்கு அழைத்து செல்லபட்ட இளம் பெண்ணை இரண்டு காவலர்கள் பாலியல் பலாத்காரம் செய்துள்ள நிலையில் இருவரும் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

அமெரிக்காவின் நியூயோர்க்கை சேர்ந்தவர் அண்ணா சேம்பர்ஸ் (18) இளம் பெண்ணான இவர் அங்குள்ள ஒரு உணவகத்தின் அருகில் இருந்த கார் நிறுத்துமிடத்தில் கஞ்சா புகைத்துள்ளார்.

இதையடுத்து காவலர்களான எடி மார்டின்ஸ் மற்றும் ரிச்சர்ட் ஹால் ஆகிய இருவரும் சேர்ந்து அண்ணாவை கைது செய்தனர்.

அண்ணாவுக்கு கைவிலங்கு போடப்பட்டிருந்த நிலையில் விசாரணை நடத்துமிடத்தில் இரு காவலர்களும் பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளனர்.

அதில் ஒருவர் அண்ணாவை கற்பழித்துள்ளார்.

இது குறித்து அண்ணா பொலிஸ் உயர் அதிகாரிகளிடம் புகார் செய்த நிலையில், எடி மற்றும் ரிச்சர்ட் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தாங்கள் அண்ணாவை கட்டாய பலாத்காரம் செய்யவில்லை எனவும் அவர் சம்மதத்தோடு தான் உறவு கொண்டோம் எனவும் இருவரும் தெரிவித்துள்ளனர். ஆனால் அதை அண்ணா மறுத்துள்ளார்.

இது தொடர்பாக எடி மற்றும் ரிச்சர்ட் அடுத்த வாரம் நீதிமன்றத்தில் ஆஜராகவுள்ளனர்.

மேலும் அமெரிக்கா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்