அகதிகளுக்காக அதிரடி திட்டம் வகுத்து செயல்படுத்தும் சுவிஸ் அரசு

Report Print Arbin Arbin in சுவிற்சர்லாந்து
503Shares
503Shares
lankasrimarket.com

சுவிட்சர்லாந்தில் செயல்பட்டு வந்த விவசாயத்தில் அகதிகளை ஈடுபடுத்தும் திட்டமானது பெரும் வரவேற்பை பெற்ற நிலையில் அதை 2022 ஆம் ஆண்டு வரை நீட்டித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

சுவிட்சர்லாந்தில் சோதனை முயற்சியாக கடந்த 2015 ஆம் ஆண்டு 30 அகதிகளை தெரிவு செய்து அவர்களுக்கு விசா ஏற்பாடு செய்து அவர்களை விவசாயத்தில் ஈடுபடுத்தப்பட்டனர்.

3 ஆண்டுகளுக்கான அந்த திட்டமானது சுவிட்சர்லாந்தில் பெரும் வரவேற்பை பெற்ற நிலையில், குறித்த திட்டத்தை தற்போது சுவிஸ் அரசாங்கமானது எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு வரை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

அகதிகளை விவசாயத்தில் ஈடுபடுத்தும் குறித்த திட்டமானது முக்கியமாக அகதிகளை ஒருங்கிணைத்தல் மற்றும் சுவிட்சர்லாந்தில் விவசாயப்பணிகளில் ஏற்பட்டிருக்கும் இடைவெளியை குறைப்பதற்காகவும் முன்னெடுக்கப்பட்டது.

இதற்கென சுவிட்சர்லாந்தின் 45 பகுதிகளை தெரிவு செய்து அதில் 30 அகதிகளை ஈடுபடுத்தினர்.

இதில் ஒவ்வொரு விவசாயிக்கும் மாதம் 3,200 பிராங்குகள் ஊதியமாக வங்கப்படும், மட்டுமின்றி சட்டச்சிக்கல்கள் ஏதும் இல்லாத நபருக்கு கூடுதலாக 200 பிராங்குகள் வழங்கப்படும்.

மட்டுமின்றி இந்த சோதனை முயற்சியில் முழு ஈடுபாட்டுடன் செயற்படும் 21 அகதிகளுக்கு நிரந்தரமாக விவசாயம் செய்யும் உத்தரவும் வழங்கப்படும்.

திட்டம் துவங்கப்பட்டு 3 ஆண்டுகள் முடிவடைந்த நிலையில், அரசு அதிகாரிகள் மேற்கொண்ட ஆய்வின் முடிவில் குறித்த திட்டமானது பெரும் வரவேற்பை பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.

இதனையடுத்து எதிர்வரும் 2022 ஆம் ஆண்டுவரை இந்த திட்டத்தை நீட்டிக்கும் உத்தரவை சுவிஸ் அரசாங்கம் பிறப்பித்துள்ளது.

2017 ஆம் ஆண்டு மட்டும் சுவிட்சர்லாந்து விவசாயிகள் உணவுக்கான கோழி வளர்ப்பில் இரு மடங்கு வளர்ச்சியை எட்டினர்.

மட்டுமின்றி 2016 ஆம் ஆண்டு சர்க்கரைவள்ளிக்கிழங்கு சாகுபடியில் மில்லியன் டன் சாதனையை படைத்தது இந்த திட்டம்.

நாட்டில் விவசாயத்தை ஊக்குவிக்கும் அரசின் இந்த திட்டமானது பெரும் வரவேற்பை பெற்றாலும், விவசாயத்தில் ஈடுபடுபவர்களின் எண்ணிக்கையானது ஆண்டுதோறும் கடும் சரிவை சந்தித்து வருகிறது குறிப்பிடத்தக்கது.

மேலும் சுவிற்சர்லாந்து செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்