தேசிய மட்டத்தில் ஆறாவது தடவையாகவும் முதலிடம் பெற்ற தமிழ் இளைஞன்

Report Print V.T.Sahadevarajah in ஏனைய விளையாட்டுக்கள்
0Shares
0Shares
Cineulagam.com

கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்த தமிழ் இளைஞரொருவர் தேசிய விளையாட்டு விழாவின் கராத்தே போட்டிகளில் தொடர்ச்சியாக ஆறாவது முறையாகவும் முதலிடம் பெற்று தங்கப்பதக்கத்தை வென்றுள்ளார்.

43ஆவது தேசிய விளையாட்டு விழாவின் கராத்தே போட்டிகள் கண்டி - திகன உள்ளக விளையாட்டரங்கில் இடம்பெற்றன.

இந்த போட்டியில் கிழக்கு மாகாணம் சார்பாக கராத்தே -டூ போட்டியில் பாலுராஜ் கலந்து கொண்டு தங்கப் பதக்கத்தை சுவீகரித்துள்ளார்.

இவர் தொடர்ச்சியாக 6ஆவது முறையாகவும் (2012 - 2017) முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றுள்ளதோடு, தெற்காசிய கராத்தே போட்டிகளில் கலந்து கொண்டு 3 முறை தங்க பதக்கங்களை வென்றுள்ளார்.

இந்த நிலையில் தனது வெற்றிக்கு உறுதுணையாக இருந்த அனைவருக்கும் கல்முனை - சேனைக்குடியிருப்பை சேர்ந்த தமிழ் இனைஞரான பாலுராஜ் நன்றி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்