வல்லரசுகளுடன் மல்லுக்கட்டும் வடகொரியா: வெல்லப்போவது யாரு?

Report Print Arbin Arbin in ஏனைய நாடுகள்
1331Shares
1331Shares
lankasrimarket.com

கொரியா தீபகற்பத்தில் எழுந்துள்ள போர்ச்சூழலில் வட்கொரியாவுக்கு எதிராக ரஷ்யா, சீனா, ஜப்பான், தென் கொரியா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகள் வரிந்து கட்டினாலும், இதில் யார் வெல்வார்கள் என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது.

உலக நாடுகளின் எதிர்ப்பையும் கண்டனங்களையும் கண்டுகொள்ளாமல் தொடர்ந்து ஏவுகணை சோதனையில் ஈடுபட்டு வருகிறார் வடகொரிய ஆட்சியாளர் கிம் ஜோங் உன். அமெரிக்காவின் முக்கிய நகரம் வரை மட்டுமல்ல, பிரித்தானியாவின் தலைநகர் வரை சென்று தாக்கும் வல்லமை பொருந்திய ஏவுகணை சோதனையை நடத்தி அதில் வெற்றியும் கண்டுள்ள வடகொரியா வல்லரசுகளுடன் மல்லுக்கட்டுகிறது.

வடகொரியா

அந்த பிராந்தியத்தில் எந்த நாடுகளையும் விட இரண்டாவது பெரிய ராணுவத்தை கொண்டுள்ளது. 1.02 மில்லியன் ராணுவ வீரர்கள் போருக்கு ஆயத்த நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனர்.

வடகொரிய மக்கட்தொகையில் 4 சதவிகிதம் பேர் ராணுவத்தில் உள்ளனர். மட்டுமின்றி வடகொரியாவிடம் 74 நீர்முழ்கிகள் உள்ளன. 286 ஹெலிகொப்டர்கள், 3 யுத்தக்கப்பல்கள், 4,060 ராணுவ டாங்கிகள், 545 போர் விமானங்கள் உள்ளன.

அமெரிக்கா

உலகின் மிகவும் சக்தி வாய்ந்த ராணுவத்தை தனதாக்கிக் கொண்டுள்ள நாடு. பாதுகாப்புக்கு என மட்டுமே 611.2 பில்லியன் டொலர் செலவு செய்யும் நாடு. 409,000 ராணுவ வீரர்கள், 5,437 ஹெலிகொப்டர்கள், 88 யுத்தக் கப்பல்கள், 2384 டாங்கிகள், 71 நீர்முழ்கி கப்பல்கள், 1,442 போர் விமானக்கள் உள்ளன.

சீனா

அமெரிக்காவை விட மூன்று மடங்கு அதிக ராணுவ வீரர்களை கொண்ட நாடு சீனா. ராணுவத்துக்கு என மட்டும் 215.2 பில்லியன் டொலர்கள் செலவிடுகின்றது. 1.6 மில்லியன் ராணுவ வீரர்கள், 7,190 டாங்கிகள், 2,306 போர் விமானங்கள், 73 போர் கப்பல்கள், 61 நீர்முழ்கி கப்பல்கள் மற்றும் 1,069 ஹெலிகொப்டர்கள் கொண்டுள்ளது.

ரஷ்யா

உலகின் மிக அதிக நிலப்பரப்பை கொண்டுள்ள நாடு என்ற போதிலும் அண்டை நாடான சீனாவை விடவும் மிகவும் சிறிய ராணுவத்தையை ரஷ்யா கொண்டுள்ளது. 240,000 ராணுவ வீரர்கள், 2,700 டாங்கிகள், 1090 போர் விமானங்கள், 854 ஹெலிகொப்டர், 34 யுத்த கப்பல்கள், 62 நீர்முழ்கி கப்பல்கள் என கொண்டுள்ள ரஷ்யா ஆண்டுக்கு 69.2 பில்லியன் டொலர்கள் மட்டுமே பாதுகாப்புக்கு என செலவிடுகின்றது.

தென்கொரியா

தொடரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் வடகொரியாவினால் தென் கொரியாவும் தமது ராணுவத்தை போதுமான அளவுக்கு விரிவுபடுத்தியே வத்துள்ளது. பாதுகாப்புக்கென்று 36.8 பில்லியன் டொலர்கள் செலவிடும் தென் கொரியாவிடம் 495,000 ராணுவ வீரர்கள் உள்ளனர். 2,418 ராணுவ டாங்கிகள், 556 போர் விமானங்கள், 23 நீர்முழ்கி கப்பல்கள் மற்றும் 602 ஹெலிகொப்டர்கள் என வடகொரியாவை எதிர்க்கொள்ள எப்போதுமே ஆயத்தமாக உள்ளது.

ஜப்பான்

ஜப்பான் நாடு இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னர் ராணுவ விவகாரத்தில் அமெரிக்காவை சார்ந்தே இருந்து வருகிறது. 46.1 பில்லியன் டொலர்கள் பாதுகாப்புக்கு என ஒதுக்கும் ஜப்பானிடம் 151,000 ராணுவ வீரர்கள் உள்ளனர். 688 ராணுவ டாங்கிகள், 557 போர் விமானங்கள், 18 நீர்முழ்கி கப்பல்கள் மற்றும் 44 போர் கப்பல்கள் உள்ளன.

மேலும் ஏனைய நாடுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்