குடும்பத்தை தாங்கி வாழ்க்கையை இதமாக்குபவர் என் மனைவி: மனம் திறந்த ஆர்.ஜே பாலாஜி

Report Print Raju Raju in வாழ்க்கை முறை
0Shares
0Shares
lankasri.com

பிரபல நடிகராகவும், தொக்குப்பாளராகவும் பிசியாக வலம் வரும் ஆர்.ஜே பாலாஜி தனது மனைவி திவ்யா நாகராஜன் தான் குடும்பத்தின் மந்திரி என கூறுகிறார்.

அவர் கூறுகையில், நானும் என் மனைவி திவ்யாவும் கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தவர்கள்.

படிப்பு முடிய சில மாதங்கள் இருக்கும் போது தான் எங்களுக்குள் காதல் இருந்ததை உணர்ந்தோம்.

இளங்கலை முடித்ததுமே திருமணம் செய்துகொண்டதால் நாங்கள் நிறைய கஷ்டப்பட்டோம்.

குடும்பத்தை எப்படி நடத்துவது, யார் சமைப்பது உள்ளிட்ட எந்த விடயத்தையுமே முடிவு செய்ய முடியாமல் தவித்தோம்.

நகைச்சுவையாக பேசுவதில் திவ்யாவும் வல்லவர். மற்றவர்களிடம் பேசும்போது நன்றாக இல்லையென்றால் உடனே சொல்லிவிடுவார். அவரிடம் எந்தவொரு ஒளிவு மறைவும் இருக்காது.

எந்த வேலையாக இருந்தாலும் அவரைவிட சிறப்பாக யாரும் செய்துவிட முடியாது என்பது மாதிரி செய்வார். அப்போது அவருக்கு வங்கியில் பணி. எட்டு மாத கர்ப்பமாக இருந்தபோதும், இரவு 9 மணி வரை வேலை செய்துவிட்டு வருவார்.

திவ்யா கர்ப்பமாக இருந்தபோது டூவீலரில் படத்துக்குப் போயிருந்தோம். வண்டியை அவர் ஓட்டிக் கொண்டிருந்தபோது எனக்கு வலி வருவது மாதிரி இருக்கிறது என்றார். உடனே நான் வண்டியை ஓட்டிக்கொண்டு அவரைப் பின்னால் உட்கார வைத்து மருத்துவமனைக்குச் சென்றேன்.

வலிக்கிறது, முடியவில்லை என்று அவர் புலம்பவும் இல்லை, அழவும் இல்லை. மருத்துவமனையில் சேர்ந்தவுடன் அவரே அவர் குடும்பத்தினருக்குத் தகவல் சொன்னார்.

இரண்டு குழந்தைகள் பிறந்தபோதும் அவரோடு அறையிலே இருந்தேன். அவரது மனவலிமை எப்போதுமே என்னை பிரமிக்க வைக்கும்.

இப்போதும் அவர் வண்டி ஓட்ட நான் குழந்தைகளை மடியில் வைத்து கொள்வேன்

ஆம், எப்போதும் என்னையும் என் பிள்ளைகளையும் தாங்கிப் பிடித்து வாழ்க்கைப் பயணத்தை சுகமாக்குபவர் திவ்யா தான்!


மேலும் வாழ்க்கை முறை செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்