மீனவர்களுக்கு உதவும் அதிநவீன கமெரா அறிமுகம்

Report Print Givitharan Givitharan in அறிமுகம்
0Shares
0Shares
lankasri.com

கமெராக்களின் பயன்பாடானது பல்வேறு துறைகளிலும் இன்று இன்றியமையாததாக காணப்படுகின்றது.

இவ்வாறே கடலடி ஆராய்ச்சிகளுக்கும் விசேட கமெராக்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

எனினும் மீன்பிடிப்பவர்களுக்கு உதவும் நோக்கிலான கமெராக்கள் இதுவரை உருவாக்கப்பட்டிருக்கவில்லை.

ஆனால் முதன் முறையாக Moordan Trablus எனும் நிறுவனம் இதற்கான கமெராவினை வடிவமைத்துள்ளது.

Spydro எனும் இக் கமெரா வீடியோ பதிவு செய்வது மட்டுமன்றி வெப்பநிலை, கடலின் ஆழம், வேகம் மற்றும் புவியியல் அமைவிடம் என்பவற்றினையும் காட்டக்கூடியது.

அடுத்த வருடம் ஜனவரி மாதம் முதல் இக் கமெரா விற்பனைக்கு வரவுள்ளது.

iOS மற்றும் Android சாதனங்களுடன் இணைத்து பயன்படுத்தக்கூடிதாக இருப்பதுடன் விலையானது 179 டொலர்கள் வரை இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் அறிமுகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்