இப்போது உங்களுக்கு சந்தோஷமா? கருணாநிதி சடலம் அருகில் அனல் கக்கிய ஸ்டாலின்

Report Print Raju Raju in இந்தியா
170Shares
170Shares
lankasrimarket.com

திமுக தலைவர் கருணாநிதியின் உடல் அடக்கம் செய்யப்பட்ட போது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஏன் கலந்து கொள்ளவில்லை என்பதற்கான காரணம் வெளியில் கசிந்துள்ளது.

கருணாநிதிக்கு சென்னை மெரினா கடற்கரையில் இடம் தர முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தரப்பு மறுத்தது திமுக தரப்பிற்கு கடும் கோபத்தை ஏற்படுத்தியுள்ளதாம்.

இதன்பின்னர் திமுக தரப்பு நீதிமன்றத்தை நாடி அதில் வெற்றியும் பெற்றது.

இந்த வழக்கு நீதிமன்றத்தில் இருந்த போது தான், எடப்பாடி பழனிச்சாமி மற்றும் ஓ.பி.எஸ் கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்த ராஜாஜி ஹாலுக்கு வந்தனர்.

அப்போது எடப்பாடி, மு.க ஸ்டாலினை பார்த்து வணக்கம் வைத்தார்.

பதிலுக்கு, எடப்பாடியிடம் இப்போது உங்களுக்கு சந்தோஷமா? என சிரித்தபடியே கேட்டுள்ளார் ஸ்டாலின்.

ஆனால், அனல் கக்கும் பார்வையில் கேட்டாராம்.

கருணாநிதியின் இறுதி நிகழ்வில் எடப்பாடி பழனிச்சாமி கலந்து கொள்வதாய் இருந்தததாம். ஆனால், ஸ்டாலின் மற்றும் திமுகவினர் கடுமையான கோபத்தில் இருக்கும் இந்த சூழலில் அங்கு சென்றால் பிரச்சனை வரலாம் என கிரிஜா வைத்தியநாதன் கூறியதால் எடப்பாடி பழனிச்சாமி அங்கு போகவில்லை என செய்தி வெளியாகியுள்ளது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்