தமிழ்நாட்டையே உலுக்கிய கொடூரக் கொலையில் தீர்ப்பு திகதி அறிவிப்பு

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

உடுமலை சங்கர் சாதி ஆணவப் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் அடுத்த மாதம் 12 ஆம் திகதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தின் திருப்பூர் மாவட்டம் உடுமலையை சேர்ந்த சங்கர், கவுசல்யா என்ற பெண்ணை சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டார்.

இதனால் ஆத்திரமடைந்த கவுசல்யாவின் உறவினர்கள் கடந்த 2016-ம் ஆண்டு சங்கரை நடுரோட்டில் வெட்டிப் படுகொலை செய்தனர்.

தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய இந்த படுகொலை தொடர்பான வழக்கு திருப்பூர் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இன்றைய விசாரணையின் போது குற்றம்சாட்டப்பட்ட சங்கரின் மாமனார் மற்றும் மாமியார் ஆகியோர் நீதிமன்றத்தில் ஆஜராகினர்.

இந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்ட கவுசல்யாவும் இன்று நீதிமன்றத்தில் ஆஜராகினார். வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் வரும் டிசம்பர் 12-ம் திகதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்படும் என நீதிபதி தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்