குழப்பும் கமல்ஹாசனின் டுவிட்டுகள்

Report Print Deepthi Deepthi in இந்தியா
0Shares
0Shares
lankasrimarket.com

அரசியல் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டர் பக்கத்தில் பதிவிடும் பதிவுகள் எளிதில் புரிந்துகொள்ளும்படி இல்லை என்று பலரும் கருத்து தெரிவித்துள்ளனர்.

தமிழகத்தின் தற்போதைய அரசியல் நிலைமைகள் குறித்து நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துகள் பதிவிடுவது வழக்கம்.

ஆனால், இவர் பதிவிடும் கருத்துக்களுக்கு எளிதில் பொருள் கொள்ள முடியவில்லை. அந்த அளவுக்கு இவரது ட்வீட்டில் அதிக குழப்பம் நிலவுகிறது.

தற்போது கூட தனது டுவிட்டர் பக்கத்தில், அகில இந்திய விவசாய கட்சிகள், வரை கடந்து கூடுவதில் மகிழ்ச்சி. இனியும் சேராதிருப்போர், சேர்க. இது முக்கியமான மக்கள் குரல், பசிக்கு மதமில்லை, பசிக்கு பதில் விவாசயம்தான். மதம் கடந்து மக்களை காப்போம். மக்களே மையம் வாழிய பாரதம் என்று பதிவிட்டிருக்கிறார்.

இதனை படித்த சிலர் அகில இந்திய விவசாயிகள் என்று தனது கட்சிக்கு பெயர் சூட்டியுள்ளார், அதில் இணைவதற்கு பலருக்கும் அழைப்பு விடுத்துள்ளார் என புரிந்துகொண்டனர்.

இதற்கு முன் காங்கிரஸை சேர்ந்த ஈவி.கே.எஸ் இளங்கோவன் கமல் புரியும்படி பேசவேண்டும் என்று கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்