யமுனையில் படகு கவிழ்ந்து 19 பேர் பலி: 31 பேர் மாயம்

Report Print Arbin Arbin in இந்தியா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

உத்தரப்பிரதேச மாநிலத்தில் யமுனா நதியில் படகு கவிழ்ந்து ஏற்பட்ட விபத்தில் 19 பேர் பலியாகியுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாக்பாட் என்னும் இடத்திலிருந்து யமுனா நதியில் ஹரியானா செல்லும்போது இன்று காலை திடீரென படகு கவிழ்ந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

advertisement

இந்தப் படகில் 50 க்கும் மேற்பட்டவர்கள் பயணம் செய்ததாகக் கூறப்படுகிறது. படகில் பயணம் செய்ய அதிகபட்சம் 35 பேருக்கு மட்டுமே அனுமதி உள்ள நிலையில் அளவுக்கு அதிகமாக ஆட்களை ஏற்றிச் சென்றுள்ளது தெரியவந்துள்ளது.

படகு கவிழ்ந்ததில் 10 பேர் மட்டுமே நீந்தி உயிர்பிழைத்துள்ளனர். 19 பேர் பலியாகியுள்ளனர். மாவட்ட நிர்வாகமும் அந்தப் பகுதியைச் சேர்ந்த கிராம மக்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டுள்ளனர்.

மேலும் 30 க்கும் மேற்பட்டவர்கள் மாயமானதாக கூறப்படுகிறது, இதனால் பலி எண்ணிக்கை மேலும் உயரும் என அஞ்சப்படுகிறது.

இந்நிலையில் மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் பலியான குடும்பத்திற்கு ரூபாய் இரண்டு லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று அறிவித்துள்ளார். இந்த விபத்து தொடர்பாக விசாரணை நடத்த குழு அமைக்கப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்தியா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்