இந்த உணவில் மட்டும் நெய் சேர்த்து சாப்பிடுங்க

Report Print Printha in ஆரோக்கியம்
0Shares
0Shares
lankasri.com

ஆயுர்வேத முறைப்படி பசுவின் நெய்யில் நல்ல கொழுப்பு மட்டுமே உள்ளது. அதனால் அது நம் உடலின் ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது.

ஆனால் நெய்யை எந்த முறையில், எந்த உணவுகளுடன் சேரும் போது, ஆரோக்கியம் கிடைக்கும் என்பதில் பல சூட்சமம் அடங்கியுள்ளது.

எந்த உணவுடன் நெய் சேர்த்து சாப்பிட வேண்டும்?

  • மதிய உணவில் 1/2 டீஸ்பூன் அளவு நெய் சேர்த்து சாப்பிடுவது நல்லது. ஆனால் அதோடு உப்பை கட்டாயமாக சேர்த்துக் கொள்ள வேண்டும்.

  • எண்ணெய்க்கு பதிலாக, நெய் ஊற்றி தோசை செய்யும் போது, நெய்யை மிகக் குறைந்த அளவில் சேர்க்க வேண்டும்.

  • நெய்யை மதிய உணவில் மட்டுமே சேர்த்துக் கொள்ள வேண்டும், இரவு உணவில் சேர்த்துக் கொள்ளக் கூடாது.

  • சூடாக சமைத்த உணவில் மட்டுமே நெய்யை சேர்க்க வேண்டும் அல்லது பசுநெய்யை உருக்கிய பின் சாப்பிடலாம்.

  • நெய்யை சூடு இல்லாத உணவுகள் மற்றும் ஃபிரிட்ஜில் வைக்கப்பட்ட உணவுகளில் சேர்க்கக் கூடாது.

  • பாசி பருப்போடு நெய்யை சேர்த்து குழந்தைகளுக்கு கொடுத்தால், குழந்தைக்கு சரியான ஊட்டச்சத்துக்கள் கிடைக்கும்.

  • பிரியாணி, சிக்கன் கிரேவி, சிக்கன் குழம்பு, சிக்கன் வறுவல், மீன், முட்டை, இறால் போன்ற அசைவ உணவுகளோடு நெய்யை சேர்க்கக் கூடாது.

யாரெல்லாம் நெய் சாப்பிடலாம்?

ஒரு வயது குழந்தை முதல் ஐம்பது வயதுள்ள பெரியவர்கள் வரை சுத்தமான பசு நெய்யை உணவோடு சேர்த்து சாப்பிடலாம்.

யாரெல்லாம் நெய் சாப்பிடக் கூடாது?

செரிமானக் கோளாறு, வாயுத் தொல்லை, வாந்தி, கல்லீரல் வீக்கம், வயிற்றுக் கோளாறு போன்ற பிரச்சனை உள்ளவர்கள் நெய்யை தவிர்ப்பது மிகவும் நல்லது.

மேலும் ஆரோக்கியம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்