வெகு விமர்சையாக நடைபெற்ற வால்பாறை முத்துமாரியம்மனின் திருக்கல்யாணம்

Report Print Kavitha in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வால்பாறை அடுத்துள்ளது லோயர்பாரளை எஸ்டேட் முத்துமாரியம்மன் கோவில் திருவிழாவில் நேற்று அம்மனுக்கு வெகுவிமர்சையாக திருக்கல்யாணம் நடைபெற்றது.

இந்த கோவிலின், 48ம் ஆண்டு திருவிழா கடந்த 2 ம் தேதி அன்று கொடியேற்றத்துடன் துவங்கியது.

திருக்கொடியை எஸ்டேட் பொதுமேலாளர் ரவி அவர்கள் ஏற்றினார்.

இந்த விழாவையொட்டி, ஒவ்வொரு நாளும் அம்மனுக்கு சிறப்பு அபிஷக பூஜையும் மற்றும் அலங்கார பூஜையும் நடந்தது.

தொடர்ந்து நேற்று அம்மனுக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது, பக்தர்களுக்கு அன்னதானும் வழங்கப்பட்டது.

திருவிழாவையொட்டி, அலங்கரிக்கப்பட்ட தேரில் அம்மன் எழுந்தருளி திருவீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்