வவுனியா பொது நூலகத்தின் வாசிப்பு மாத பரிசளிப்பு விழா

Report Print Theesan in நிகழ்வுகள்
0Shares
0Shares
lankasrimarket.com

வவுனியாவில் தேசிய வாசிப்பு மாதத்தை முன்னிட்டு வவுனியா பொது நூலகத்தினால் மாணவர்களுக்கிடையே நடத்தப்பட்ட போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கும் நிகழ்வு இடம்பெற்றுள்ளது.

இந்த நிகழ்வு, இன்றைய தினம்(05) வவுனியா கலாசார மண்டபத்தில் வவுனியா நகரசபைச் செயலாளர் ஆர். தயாபரன் தலைமையில் நடைபெற்றுள்ளது.

குறித்த நிகழ்வில், மாணவர்களுக்கு சான்றிதழ்கள், பரிசில்கள் வழங்கிவைக்கப்பட்டுள்ளதுடன், நகரசபையின் வருடந்த நூல் வெளியீடும் இடம்பெற்றது.

இதேவேளை, நகரசபையில் ஓய்வு பெற்றவர்களின் கௌரவிப்பு இடம்பெற்றதுடன், திறமையாக செயற்பட்ட ஊழியர்களுக்கும் கௌரவிப்பு வழங்கப்பட்டது.

இதன்போது, வவுனியா தேசியகல்வியல் கல்லூரியின் ஓய்வு நிலை பீடாதிபதி குமாரசாமி சிதம்பரநாதன், தமிழ் மணி அகளங்கன், க. சத்தியசீலன் வவுனியா வடக்கு பிரதேச சபைச் செயலாளர், வவுனியா சைவப்பிரகாச மகளிர் கல்லூரியின் அதிபர் பாக்கியநாதன் கமலேஸ்வரி, வவுனியா சைவப்பிரகாச ஆரம்பப்பிரிவு அதிபர் தியாகசோதி யுவராஜா ஆகியோர் கலந்துகொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் நிகழ்வுகள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்