பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தவறான கருத்துக்கணிப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படும்- தெரேசா மே

Report Print Thayalan Thayalan in ஐரோப்பா
0Shares
0Shares
lankasrimarket.com

பிரெக்சிற் விவகாரம் தொடர்பில் தவறான கருத்துக்கணிப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படும் என, பிரித்தானியப் பிரதமர் தெரேசா மே தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் பிரெக்சிற் விவகாரம் மீதான விவாதம் நடைபெறும் வேளையில் இந்த விவகாரம் தொடர்பில் தான் தெளிவுபடுத்தவுள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

முன்னேற்றகரமான பிரெக்சிற் விவகாரம் எப்பொழுதும் சுமூகமானதாக இருக்காது எனவும் அவர் கூறியுள்ளார்.

இருப்பினும், ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் பிரத்தானியாவுக்கும் இடையில் சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தத்தை ஏற்படுத்த தான் விரும்புவதாகவும் அவர் கூறியுள்ளார்.

பிரெக்சிற் விவகாரம் தொடர்பான ஐந்தாம் கட்டப் பேச்சுவார்த்தை பிரஸல்ஸில் இம்மாதம் நடைபெறவுள்ளது.

மேலும் ஐரோப்பா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்