பேஸ்புக் நிறுவனர் தனது பாதுகாப்பிற்காக ஒரு நாளைக்கு செலவிடும் தொகை எவ்வளவு தெரியுமா?

Report Print Arbin Arbin in தொழிலதிபர்
297Shares
297Shares
lankasrimarket.com

மார்க் சக்கர்பெர்க்கின் பாதுகாப்பிற்காக 24 மணி நேரத்திற்கு சுமார் 27,000 டொலர் செலவு செய்கிறது பேஸ்புக் நிறுவனம் என அதிர்ச்சித் தகவல் வெளியிட்டுள்ளது Equaliar என்ற ஆராய்ச்சி நிறுவனம்.

கடந்த 2004ம் ஆண்டிலிருந்து பேஸ்புக் நிறுவனத்தின் CEOவக உள்ளார் மார்க். அவர் தற்போது ஒரு வருடத்திற்கு தன்னுடைய பாதுகாப்பிற்காக 10 மில்லியன் டொலர் செலவு செய்வதாக equaliar என்ற ஆராய்ச்சி நிறுவனத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வருடம் மட்டும் மார்க்கின் பாதுகாப்பிற்காக பேஸ்புக் நிறுவனத்தால் செலவு செய்யப்பட்ட தொகை 7.3 மில்லியன் டொலர்.

இந்நிலையில், கடந்த சில மாதங்களாக பேஸ்புக்கின் பங்குகள் மிக மோசமான நிலைக்குச் சென்றிருந்தது. இச்சூழலில், மார்க்கின் பாதுகாப்பிற்காக 10 மில்லியன் டொலருக்கு மேல் பேஸ்புக் நிறுவனம் செலவு செய்து இருப்பது டெக் உலகில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மார்க்கின் பாதுகாப்பிற்காக செலவு செய்ப்பட்டுள்ள தொகையினை, 100 பெரு நிறுவன CEO-க்களுக்கு பாதுகாப்பிற்காக செலவு செய்ய முடியும் என equaliar ஆராய்ச்சி நிறுவனம் கூறியுள்ளது.

மேலும், மார்க் சக்கர்பெர்க்கின் Palo Alto வீட்டில் மட்டும் சுழற்சி முறையில் 16 பணியாளர்கள் பாதுகாப்பிற்காக 24 மணிநேரம் ஈடுபடுவார்கள் என தனியார் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

மார்க்கின் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்படும் தொகை அமேசான் நிறுவனத்தின் CEO 'Jeff bezos'ன் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்படும் தொகையை விட பல மடங்கு அதிகம் எனக் கூறப்படுகிறது.

அதுமட்டுமின்றி, கடந்த 2016 ஆம் ஆண்டு Apple நிறுவனத்தின் CEO 'Tim cook'ன் பாதுகாப்பிற்காக செலவு செய்யப்பட்ட தொகை 2 மில்லியன் டொலர் மட்டுமே என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழிலதிபர் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்