செலவுக்கு பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுக்கிறேன்: நடிகை ஸ்ரீரெட்டி

Report Print Kabilan in பொழுதுபோக்கு
81Shares
81Shares
lankasrimarket.com

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பணம் இல்லாததால் நண்பர்களிடம் பிச்சை எடுப்பதாக தெரிவித்துள்ளார்.

தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி, தெலுங்கு திரையுலகை அடுத்து தமிழ் திரையுலகில் பட வாய்ப்புக்காக படுக்கைக்கு அழைத்தவர்களின் பெயர்களை வெளியிடப் போவதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தினார்.

இதன் காரணமாக திரையுலகினர் அவரை ஒதுக்கி வைத்திருப்பதாக தெரிவித்திருந்தார். தற்போது பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் ஸ்ரீரெட்டி, தனது அன்றாட செலவுக்கு கூட கஷ்டப்படுவதாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், ‘கையில் பணம் இல்லாமல் நண்பர்களிடம் பிச்சை எடுத்துக் கொண்டிருக்கிறேன். செலவுக்கு பணம் இல்லை, உடலில் தெம்பு குறைகிறது. இருப்பினும் நான் தொடர்ந்து போராடுவேன்’ என தெரிவித்துள்ளார்.

மேலும் அவர் கூறுகையில், ‘நான் Publicity தேட பிரபலங்களின் பெயர்களை வெளியிடுவதாக கூறுகிறார்கள். ஒரு நாள், ஒரு வாரம், ஒரு மாதம் செய்தி தலைப்பில் இருப்பதாக யாராவது தனது வாழ்க்கையுடன் விளையாடுவார்களா?’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்