அப்பாவின் எதிர்ப்பை மீறி காதலனை கரம்பிடித்த தொகுப்பாளினி மணிமேகலை

Report Print Raju Raju in பொழுதுபோக்கு
0Shares
0Shares
lankasrimarket.com

பிரபல டிவி தொகுப்பாளினி மணிமேகலை தனது காதலரை பதிவு திருமணம் செய்து கொண்டுள்ளார்.

தனியார் தொலைக்காட்சியில் பல்வேறு நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளினி மணிமேகலை ஹுசைன் என்பவரை காதலித்து வந்தார்.

மணிமேகலையின் காதலுக்கு அவர் வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்து வந்துள்ளது. இந்நிலையில் ஹுசைனை இன்று மணிமேகலை திருமணம் செய்து கொண்டதாக டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

அந்த பதிவில், ஹுசைனுக்கும் எனக்கும் இன்று திருமணமாகி விட்டது, அப்பாவை சமாதானப்படுத்த முடியாத நிலையில் எல்லாம் கைவிட்டு போனதால் திடீரென இருவரும் பதிவு திருமணம் செய்து கொண்டோம்.

நிச்சயம் ஒரு நாள் அப்பா இதை புரிந்து கொள்வார் என நம்புகிறேன். காதலுக்கு மதமில்லை என பதிவிட்டுள்ளார்.

மேலும் பொழுதுபோக்கு செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்