தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் சர்ச்சை?

Report Print Kamel Kamel in கல்வி
0Shares
0Shares
lankasrimarket.com

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை வினாத்தாள் தொடர்பில் சர்ச்சை நிலைமை ஏற்பட்டுள்ளது.

இந்த சர்ச்சை தொடர்பில் அறிக்கை ஒன்றை சமர்ப்பிக்குமாறு கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் உத்தரவிட்டுள்ளார்.

பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் டபிள்யு.எம்.என்.ஜே புஸ்பகுமாரவிற்கு இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சையின் கணித பாட வினாத்தாளின் இரண்டாம் பகுதியின் 39ம் வினாவிற்கான விடை தொடர்பில் சர்ச்சை எழுந்துள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை விடைத்தாள் மதிப்பீட்டு நடவடிக்கைள் ஏற்கனவே பூர்த்தியாகியுள்ளன. இதனால் குறித்த வினா தொடர்பிலான சர்ச்சை பெரும் குழப்ப நிலைமையை ஏற்படுத்தியுள்ளது.

தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சை கடுமையான போட்டியான பரீட்சை என்பதனால் ஒரு புள்ளி கூட மாணவ, மாணவியருக்கு கிடைக்கும் பிரபல பாடசாலைகளை மாற்றிவிடலாம் என்பது குறிப்பிடத்தக்கது.

எனவே எந்தவொரு மாணவ, மாணவியருக்கும் அநீதி ஏற்படாத வகையில் இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காணப்படும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியாவசம் கொழும்பு நாளிதழ் ஒன்றுக்குத் தெரிவித்துள்ளார்.

மேலும் கல்வி செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்