டோனியின் கீப்பிங்கை மீஞ்ச இன்னும் யாரும் இல்லை: ரவிசாஸ்திரி ஆவேசம்

Report Print Santhan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasri.com

டோனியை குறைசொல்பவர்கள் முதலில் தங்கள் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும் என்று இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி கூறியுள்ளார்.

நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடரில் டோனியின் ஆட்டம் அந்த அளவிற்கு இல்லை என்று, முன்னாள் வீரர்கள் விமர்சித்து வருகின்றனர்.

இதற்கு இந்திய அணியின் பயிற்சியாளர் ரவிசாஸ்திரி முன்னரே டோனிக்கு ஆதரவாக கருத்து தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அவர் தற்போது இரண்டாவது முறையாக, டோனியை குறை சொல்லும் முன், சொல்பவர்கள் அவர்களின் கிரிக்கெட் வாழ்க்கையை திரும்பி பார்க்க வேண்டும். டோனிக்குள் இன்னும் ஏகப்பட்ட திறமைகள் உள்ளது.

அதுமட்டுமின்றி கீப்பங்கில் டோனியை மிஞ்ச இதுவரை வேறு ஆள் இல்லை என கூறியுள்ளார்.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்