நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் போட்டி: 338 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்தது இந்திய அணி

Report Print Kabilan in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

நியூசிலாந்துக்கு எதிரான கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் 338 ஓட்டங்களை இலக்காக நிர்ணயித்துள்ளது இந்திய அணி.

கான்பூரில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் இந்திய அணியின் தொடக்க வீரர்களாக ரோகித் ஷர்மாவும், ஷிகார் தவானும் களமிறங்கினர்.

தவான் 14 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். பிறகு வந்த கோஹ்லி 113 ஓட்டங்கள் - ரோகித் சர்மா 147 ஓட்டங்கள் எடுத்தனர். இவர்களது அதிரடி ஆட்டத்தால் இந்திய அணியின் ஓட்டங்கள் அதிகரித்தது.

இறுதியில் இந்திய அணி 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 337 ஓட்டங்கள் எடுத்தது.

நியூசிலாந்து அணியில் சவுத்தி, சான்ட்னர், ஆடம் மில்னி ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதனையடுத்து 338 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி இலக்குடன் நியூசிலாந்து அணி களமிறங்கியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்