இப்படி ஒரு ஞாபக மறதியா? சிரிப்பை ஏற்படுத்தும் கிரிக்கெட் வீரர்.... வைரல் வீடியோ

Report Print Raju Raju in கிரிக்கெட்
0Shares
0Shares
lankasrimarket.com

அவுஸ்திரேலியாவுக்காக உள்ளூர் போட்டிகளில் விளையாடி வரும் பவத் அகமத் என்ற கிரிக்கெட் வீரரின் ஞாபக மறதி தொடர்பான வீடியோ வைரலாகியுள்ளது.

பாகிஸ்தானில் பிறந்து அவுஸ்திரேலியாவுக்காக உள்ளூர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருபவர் பவத் அகமத்.

இவர் விளையாடி ரசிகர்களை மகிழ்வித்ததை விட, அவரின் மறதி ரசிகர்களை மிகவும் ரசிக்க வைத்துள்ளது.

முன்பு ஒருமுறை அகமத் பேட்டிங் செய்ய களமிறங்கிய போது, பேட்டுக்கு பதிலாக தன் கிளவுஸை அக்குளுக்குள் வைத்து வந்தார்.

ஒரு கையில் கிளவுஸ் அணிந்த பின்னர், மறுகையில் கிளவுஸ் அணிய கிளவுஸ் எடுக்கும் போது தான் தெரிந்தது, அவர் பேட்டிங் செய்ய பேட்டே எடுத்து வரவில்லை என்று.

இந்நிலையில், நேற்று முன்தினம் இதே போன்ற ஒரு விடயத்தை அகமத் செய்துள்ளார்.

பேட்டிங் செய்ய மைதானத்தில் களமிறங்கிய அகமத் பேட் எடுத்தாச்சா, ஹெல்மெட், கிளவுஸ் எல்லாம் எடுத்தாச்சா என சரிபார்த்துக் கொண்டார்.

ஆனால் வலது கையில் மாட்டக்கூடிய கிளவுஸையே இரண்டு கொண்டு வந்தது மைதானத்துக்கு உள்ளே வந்த பின் தான் அகமதுக்கு தெரிந்தது.

இதையடுத்து தனது மறதியை நினைத்து அவருக்கே அடக்க முடியாத சிரிப்பு வந்தது. இது சம்மந்தமான வீடியோ வைரலாகியுள்ளது.

மேலும் கிரிக்கெட் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்