சிறப்பிக்கப்பட்ட பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா

Report Print Sinan in சமூகம்
0Shares
0Shares
lankasrimarket.com

கொழும்பு - பம்பலபிட்டி இராமநாதன் இந்து மகளீர் கல்லூரியின் 2016 - 17 ஆம் ஆண்டிற்கான வருடாந்த பரிசளிப்பு விழா இன்றைய தினம் இடம்பெற்றுள்ளது.

குறித்த நிகழ்வு கல்லூரி அதிபர் கோதை நகுலராஜா தலைமையில், பம்பலபிட்டி சரஸ்வதி மண்டபத்தில் பிற்பகலளவில் நடைபெற்றுள்ளது.

இதன்போது கல்வியில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் பலருக்கும், க.பொ.த சாதாரண தர மற்றும் க.பொ.த உயர்தர பரீட்சைகளில் சிறப்பு சித்திகளை பெற்ற பல மாணவர்களுக்கும் சான்றிதழ்கள் மற்றும் பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.

இந்த நிகழ்வில் கல்வி அமைச்சின் செயலாளர் சுனில் ஹெட்டியாராச்சி பிரதம விருந்தினராக கலந்து கொண்டிருந்ததுடன், பாடசாலை மாணவர்கள், ஆசிரியர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

மேலும் சமூகம் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்