தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்ட கனேடிய குடும்பம் விடுதலை

Report Print Peterson Peterson in கனடா
0Shares
0Shares
Cineulagam.com
advertisement

தலிபான் தீவிரவாதிகளால் சிறைபிடிக்கப்பட்டு 5 ஆண்டுகளுக்கு பின்னர் கனடாவை சேர்ந்த குடும்பத்தினர் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கனடாவை சேர்ந்த Joshua Boyle என்பவர் அமெரிக்க குடிமகளை திருமணம் செய்து 5 ஆண்டுகளுக்கு முன்னர் ஆப்கானிஸ்தான் நாட்டிற்கு பயணமாகியுள்ளார்.

advertisement

கர்ப்பிணியான மனைவியுடன் சுற்றுலா சென்றபோது தலிபான் தீவிரவாதிகள் இருவரையும் சிறைப்பிடித்துள்ளனர்.

அமெரிக்கா மற்றும் கனடா நாடுகளிடம் சில கோரிக்கைகளை வலியுறுத்தி தீவிரவாதிகள் இருவரையும் விடுதலை செய்ய மறுத்து வந்துள்ளனர்.

பிணையக்கைதியாக இருந்தபோது தாயாருக்கு மூன்று பிள்ளைகள் பிறந்துள்ளன.

சில மாதங்களுக்கு முன்னர் கனேடிய குடும்பத்தினரை விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்குமாறு பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் நாடுகளுக்கு அமெரிக்கா மற்றும் கனேடிய அரசுகள் கோரிக்கை விடுத்து வந்தன.

இந்நிலையில், 5 ஆண்டுகளாக பிணையக்கைதியாக இருந்த குடும்பத்தினர் அனைவரும் விடுதலை செய்யப்பட்டுள்ளதாக பாகிஸ்தான் அரசு ஆதாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

மேலும், கனடா நாட்டிற்கு அனைவரும் பத்திரமாக திரும்பும் வரை அவர்கள் தற்போது இருக்கும் இடம் ரகசியமாக வைக்கப்படும் என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் கனடா செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்